இஸ்ரேல் தலைநகராக ஜெருசலமை அங்கீகரித்தது ஆஸ்திரேலியா - Seithipunal
Seithipunal


 

இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரித்து ஒரு ஆண்டுக்குப் பின், மேற்கு ஜெருசலேமை தலைநகராக அங்கீகரிப்போம் என்று ஆஸ்திரேலியா இன்று அறிவித்துள்ளது.

 

 

ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதாக ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன் இன்று அறிவித்துள்ளார்.

இது குறித்து இன்று செய்தியாளர்களிடையே பேசிய ஸ்காட், இஸ்ரேல் நாட்டின் தலைநகராக மேற்கு ஜெருசெலத்தை நாங்கள் அங்கீகரிக்கிறோம், அதில் எந்த மாற்றமுமில்லை, ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் ஆஸ்திரேலியத் தூதரகம் டெல் அவைவ் நகரிலேயே செயல்படும். இதை மாற்றுவதுப் பற்றி பின்னர் யோசிக்கப்படும் என்றார்.

எங்கள் வெளிநாட்டுக் கொள்கை எப்பொழுதும், எங்களின் குணத்தையும், எங்கள் நாட்டின் மதிப்புகளையும் பேசுவதாக இருக்கவேண்டும், நாங்கள் ஒருவரை ஆதரித்தால் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருப்போம். நாங்கள் எதன் மீது நம்பிக்கை வைக்கிறோமோ அதை முழுமையாகப் பாதுகாப்போம் எனக் கூறினார்.

ஆஸ்திரேலியாவின் நெருங்கிய நட்பு நாடான இந்தோனேசியா ஜெருசெலமை இஸ்ரேலின் தலைநகராக ஏற்கவில்லை. அது ஒருபோதும் இதை அங்கீகரிக்காது எனக் கூறிவந்த நிலையில் ஆஸ்திரேலியா அங்கீகரித்து இருப்பது இரு நாடுகளுக்கு இடையே இருக்கும் உறவை பாதிக்கும் எனத் தெரிகிறது.

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலமை  அமெரிக்கா அங்கீகரித்து ஒரு ஆண்டுக்குப் பின், மேற்கு ஜெருசலேமை தலைநகராக அங்கீகரிப்போம் என்று ஆஸ்திரேலியா இன்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Australia Accept Jerusalem as Israel Capital


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->