கணவர் போயே போய்விட்டார்.. மனைவி செய்த காரியம்: வீடியோவை பார்த்து வந்த ஐடியா..? - Seithipunal
Seithipunal


கனடாவில் சக்காட்சுவான் மாகாணத்தை சேர்ந்த பெண் தனக்கு விவாகரத்து ஆனதை தனது நண்பர்களுடன் கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.

கனடா நாட்டில் சக்காட்சுவான்  மாகாணத்தை சேர்ந்தவர் நிகோல் நியிஸ்னர். இவருக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது கணவரை விவாகரத்து செய்துள்ளார்.

இதனையடுத்து புதிதாக தனது வாழ்க்கையை தொடங்கும் விதமாக தனது விவாகரத்து நிகழ்வை பெரிய அளவில் கொண்டாடியுள்ளார்.

உடனே தனது தோழிகளுக்கு போன் செய்து அவர்கள் திருமணத்தன்று அணிந்த ஆடைகளை அணிந்து வர கூறி இருக்கிறார்.

இதையடுத்து அவரின் தோழிகள் அனைவரும் வெள்ளை நிற ஆடை அணிந்து அந்த பெண்ணின் வீட்டுக்கு வந்த நிலையில், அவரும் அதே ஆடையை அணிந்திருந்தார்.

பின்னர் ஒருவருக்கொருவர் கட்டி தழுவி நடனமாடியும், மது அருந்தியும் உற்சாகமாக இருந்தார்கள்.

இது குறித்து அவர் கூறுகையில், விவாகரத்து என்பது வலி நிறைந்தது தான். ஆனால் இப்போது என் வாழ்வில் புது அத்தியாயம் இனிமேல் தான் தொடங்க இருக்கிறது. இதை கொண்டாட வேண்டும் என தோன்றியதால் கொண்டாடினேன்.

இணையத்தில் இது போல பலர் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வீடியோவை பார்த்தேன். அதையெல்லாம் பார்த்தே பிறகே இந்த ஐடியா எனக்கு தோன்றியது.

இனி என் வாழ்க்கையை சிறப்பாக மீண்டும் தொடங்குவேன். என் குழந்தைகள் மீது அதிக அக்கறை செலுத்துவேன் என்று கூறி இருக்கிறார்.
    


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

angry wife revealed how she was concerned


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->