அந்தமானில் ஜான் ஆலன் காவ் கொலையில், பழங்குடியினர் ஆணையம் திடுக்கிடும் தகவல்! - Seithipunal
Seithipunal


அந்தமானில் அமெரிக்கர் கொலை தொடர்பாக மத்திய அரசிடம், பழங்குடியினர் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அந்தமானின் வடக்கு சென்டினல் தீவுகளில் வசித்து வரும் பழங்குடினர் வெளியுலக மக்களின் தொடர்பு இல்லாமல் வசித்து வருகின்றனர்.

மிகவும் கோவ குணம் கொண்ட இவர்கள், தங்கள் பகுதிக்குள் நுழையும் அன்னியர்களை கொடூரமாக கொன்று வருகின்றனர். தடையை மீறி வடக்கு சென்டினல் தீவுக்கு சென்ற ஜான் ஆலன் காவ் என்ற (27 வயது)  அமெரிக்க இளைஞர், கடந்த வாரம் அந்த பழங்குடியின மக்களால் கொல்லப்பட்டார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த அந்தமான் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மத பிரசாரம் செய்ய சென்றபோது கொல்லப்பட்டதாக முதலில் தகவல் வெளியானது.

இந்நிலையில், ஜான் ஆலன், முன்கூட்டியே திட்டமிட்டு சாகச பயணமாக அங்கு சென்றிருந்தது, பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்திருப்பதாக தேசிய பழங்குடியினர் ஆணைய தலைவர் நந்தகுமார் சாய் தெரிவித்துள்ளார். இருப்பினும், தொடர்ந்து விசாரணை நடப்பதாக அவர் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

American John Allen Chau Murder New information


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->