கதறும் அரசு ஊழியர்கள்.! கண்டு கொள்ளாத டிரம்ப்.!! வெளிநாட்டு பயணங்களை அதிரடியாக இரத்து செய்யும் பின்னணி.!!  - Seithipunal
Seithipunal


அமெரிக்கா நாட்டிற்குள் மெக்சிகோ எல்லை வழியாக பிறநாட்டினர் சட்டவிரோதமாக நுழைவதை குறைக்கும் வகையில் அமெரிக்கா அதிபரான டிரம்ப்., அமெரிக்கா மற்றும் மெக்சிகோ எல்லையில் மதில் சுவரை எழுப்பும் முயற்சிக்கு ரூ.5.7 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யக்கூறி அமெரிக்க பாராளுமன்றத்தை ஒப்புதல் கூறினார். 

இதனை கடுமையாக எதிர்த்த ஜனநாயக கட்சியின் எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக பாராளுமன்றத்தில் ஒப்புதல் நிறைவேற்றப்படாமல் அமெரிக்க அரசு நிர்வாகமானது முடங்கியது. தொடர்ந்து கடந்த ஒரு மாத காலமாக முடங்கி கிடக்கும் அரசு நிர்வாகத்தின் பிரச்சனைகளை பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலமாக நிறைவு செய்ய எண்ணி அமெரிக்க அதிபரான டிரம்ப் முடிவு செய்தார்.

அந்த வகையில்., நடைபெற்ற கூட்டத்தில் நல்ல விதமான முடிவுகள் எட்டப்படாததன் காரணமாக., கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இதன் காரணமாக அரசு துறை முடக்கும் தொடர்ந்து நீதித்து., சுமார் 8 இலட்சம் ஊழியர்களுக்கு இந்த மாத ஊதியம் வழங்கப்படுமா? என்ற சந்தேகமும்., இன்னும் எத்தனை நாட்கள் அல்லது மாதங்கள் அரசு முடக்கம் நீடிக்கும் என்ற பயத்தில் உள்ளனர். 

இந்நிலையில்., டாவோசி நகரில் நடைபெறும் உலக பொருளாதார மன்ற மாநாட்டில் பங்கேற்பதற்கு திட்டமிட்ட டிரம்ப்., பயணத்தை இரத்து செய்தார். இந்த பயண இரத்து குறித்த அறிவிப்பை நேற்று வெள்ளை மாளிகையானது வெளியிட்டது. மேலும்., இதற்கு முன்னதாக பிரசல், எகிப்து, ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு பயணம் செய்ய தயாராக இருந்த பாராளுமன்ற சபாநாயகரின் பயணத்தை டிரம்ப் அதிரடியாக இரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

america govt shutdown problem


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->