மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புவதற்கு அழாத குறையாக அடம்பிடிக்கும் டிரம்ப்.! எதிர்க்கும் சென்ட் சபை., தொடரும் நிர்வாக முடக்கம்.!! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் செலவின் மசோதாவிற்கும்., அதிபர் டிரம்பின் கோரிக்கையை எதிர்த்தும் நிதி மசோதாக்களை நிறைவேற்றாமல் சென்ட் சபையானது ஒத்திவைத்துள்ளது. இதன் காரணமாக அமெரிக்காவின் அரசு நிர்வாகமானது முற்றிலும் முடங்கியுள்ளது.

தற்போதுள்ள சூழ்நிலையில்., நிர்வாக முடக்கத்தின் காரணமாக சுமார் 8 இலட்சம் அரசு ஊழியர்கள் அவர்களின் அன்றாட பணிகளுக்கு செல்ல முடியாத நிலை அல்லது ஊதியம் இல்லாமல் பணியாற்ற கூடிய நிலைமை ஏற்படும் என்று அச்சப்பட வேண்டியுள்ளது. 

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கிய நிலையில் ஏற்பட்ட நிர்வாக முடக்கத்தின் காரணமாக அரசு ஊழியர்கள் கடுமையான பாதிப்படைந்துள்ளனர். அமெரிக்கா மற்றும் மெக்சிகோவின் எல்லை பகுதிகளில் சுவர் எழுப்புவதற்க்காக அதிபர் டிரம்ப் ரூ.5 பில்லியன் தொகையை கோரியிருந்த நிலையில்., இதற்கு சென்ட் சபையில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. 

மேலும்., தற்போது வரை இந்த பிரச்சனை நிறைவுக்கு வராததால் பெரும் அச்சத்தில் அரசு அதிகாரிகள் இருக்கின்றனர். இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியும் மக்களின் வரிப்பணத்தை இந்த திட்டத்திற்கு உபயோகம் செய்யக்கூடாது என்று தெரிவித்து தனது எதிர்ப்பை பதிவு செய்தது. 

இதன் மூலமாக வெளியுறவு துறை., உள்நாட்டு பாதுகாப்பு துறை., போக்குவரத்து துறை., விவசாயத் துறை மற்றும் நீதித்துறை என்று மொத்தமாக 9 துறைகள் நிதி கிடைக்காமல் முடங்கின. மேலும்., இந்த விசயத்திற்கு இது வரை சமரசம் எட்டப்படாத நிலையில் இரண்டு வாரகாலங்களாக அரசு முடக்கம் ஏற்பட்டுள்ளது.  

இந்நிலையில்., நேற்று பதவியேற்ற ஜனநாயக கட்சியை சார்ந்த நான்சி பெலோசி என்பவர் பிரதிநிதிகள் தலைவராக பதவியேற்ற நிலையில்., 2 செலவின மசோதாக்களுக்கான நிதிகளை ஒதுக்கீடு செய்தார். மேலும்., பிப்ரவரி மாதம் 8 ம் தேதிக்குள் - உள்நாட்டு பாதுகாப்பு துறைக்கும்., செப்டம்பர் மாதத்தின் இறுதிக்குள் பிற அரசு துறைகளுக்கும் தேவையான நிதிகளை ஒதுக்கீடு செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும்., இந்த செலவின மசோதாவில் இடம்பெற்ற மெக்சிகோ மதில் சுவர் எழுப்பும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பின் போது முதல் மற்றும் இரண்டாவது மசோதாக்கள் மீது அதிகளவு ஒப்புதல் வழங்கக்கூறி வாக்குகள் பதிவானதால் பிரதிநிதிகள் சபையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. 

இந்த மசோதாக்கள் சென்ட் சபையில் நிறைவேற்றப்பட்டவுடன் ஜனாதிபதியான டிரம்ப் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டு பின்னர் நிறைவேற்றப்படும். மேலும்., மெக்சிகோ எல்லையில் சுவர் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யும் வரை எந்த மசோதாவிற்கும் ஒப்புதல் வழங்கமாட்டேன் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்து வரும் வேளையில்., நீண்ட காலம் இந்த நிர்வாக முடக்கம் நீடிக்காது என்று தெரிவித்துள்ளார். 

அவரது தொடர் பிடிவாதத்தின் காரணமாக அமெரிக்காவில் அரசு நிர்வாக முடக்கம் தொடர்ந்து நீடித்து வருவதால் அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். அதிபர் டிரம்ப் பதிவேற்ற பின்னர் தற்போது இரண்டாவது முறையாக நிர்வாக முடக்கம் ஏற்பட்டுள்ளதும்., 2013 ம் ஆண்டிற்கு பின்னர் நிர்வாக முடக்கம் ஏற்படுவது நான்காவது முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

america govt shutdown due to trump mexico border problem


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->