அடித்தது லாட்டரி.! பணக்காரர் ஆன தச்சு தொழிலாளி.!! - Seithipunal
Seithipunalகனடாவில் வின்னிபெக் நகரை சார்ந்தவர் மெல்கிக் வயது 28. இவர் மேற்கு ஆப்பிரிக்க நாட்டை சார்ந்தவர். தனது குடும்பத்துடன் 2 ஆண்டுகளுக்கு முன்பே புலம் பெயர்ந்து கனடா வந்து தங்கினார்.


 
கடந்த ஏப்ரல் மாதம் லாட்டரி சீட்டுகளை வாங்கிய இவர் அதன் மூலம் 5 மாதங்களில் ரூ.20 கோடி சம்பாதித்தார்.

 

முதலில் கிடைத்த பரிசு தொகையை வைத்து மனைவி மற்றும் குழந்தைகளுக்கு புதிய வீடு வாங்கிஉள்ளார். பின்னர் 2-வதாக வாங்கிய பரிசு தொகையை வியாபார உபயோகத்திற்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளார்.

 

தனக்கு தச்சு வேலை செய்வதில் மிகவும் விருப்பம் உள்ளதாகவும், இந்த பணத்தை தச்சு தொழில் செய்வதற்கு உபயோகப்படுத்தப்போவதாகவும் தெரிவித்தார்.

English Summary

a worker become a richer men by a lottery

செய்திகள்Seithipunal