இணையப்பக்கத்தில் பதிவிடப்பட்ட அந்த ஒரு பதிவு.!! காத்திருக்கும் சிறை கதவுகள்.!!  - Seithipunal
Seithipunal


நியூசிலாந்து நாட்டில் உள்ள மசூதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக பயங்கர துப்பாக்கி சூடானது நடைபெற்று., பல அப்பாவி மக்கள் பரிதமாக உயிரிழந்தனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவங்களானது இணையத்தில் காணொளி காட்சிகளாக பரவவே பெரும் வைரலாகியது. 

இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் 18 வயதுடைய இளைஞர் ஒருவரின் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில்., அவரது இணையப்பக்கத்தில் மசூதியின் புகைப்படங்கள் மற்றும் வன்முறையை தூண்டும் வகையில் வாசகங்களை பதிவிட்டுள்ளார். 

இது தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில்., குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் சுமார் 14 வருடங்கள் கடுங்காவல் தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வாலிபருக்கு நீதிபதி ஜாமின் வழங்க மறுத்த நிலையில்., வரும் 8 ம் தேதி தீர்ப்பளிப்பதாக வழக்கை ஒத்திவைத்தார். 

இந்த துப்பாக்கி சூடானது நடைபெற்று உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அடுத்து., ஆஸ்திரேலிய நாட்டில் இருக்கும் புனித தளங்களில் கண்காணிப்பு பணியானது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a social media post will end 14 years of jail about new zealand masque gun shoot


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->