பாகிஸ்தானில் இஸ்லாமிய விதிமுறைக்கு புறம்பான காரியம் செய்த., பேராசிரியருக்கு நேர்ந்த சோகம்!!  - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானில் கல்லூரியில் பேராசிரியர் ஒருவர் பிரிவு உபசார விழாவில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த கொலை அவரது மாணவர்களில் ஒருவரால் நிகழ்ந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. 

பாகிஸ்தான் பாகவல்பூர் என்ற பகுதியில் உள்ள அரசு சாதிக் ஈகர்தன் கல்லூரியில் 2000 மாணவர்களும், 4000 மாணவிகளும் கல்வி பயின்று வருகின்றனர். 

இந்த கல்லூரியில் கலீத் அமீது என்பவர் ஆங்கில பேராசிரியராக வேலைபார்த்து வருகிறார். இன்னும் நான்கு மாதங்களில் அவர் ஓய்வு பெற இருந்த நிலையில் தனது மாணவ மாணவியருடன் இணைந்து பிரிவு உபசார விழா ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளார். 

பாகிஸ்தானில் இஸ்லாமிய பெண்களுக்கென்று தனிப்பட்ட விதிமுறைகள் உள்ளன. அதை பின்பற்றுவது வழக்கம். பேராசிரியர் மாணவிகளை அந்த உபசார விழாவிற்கு அழைத்திருப்பது அவர்களின் கொள்கைகளுக்கு எதிரானது. 

இதனால், சக மாணவர்களில் ஒருவரான காதீப் உசைன் என்பவர் அந்த பேராசிரியரை விழாவின் போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியினால் குத்த அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர் இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். காதீப் உசைனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A professor murdered by student in pakisthan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->