முதலில் ஒரு முத்தம்….! பிறகு, 44 வருடங்கள் கழித்து அடுத்தது….! உலகப் புகழ் பெற்ற, ஆச்சர்ய சம்பவம்…! - Seithipunal
Seithipunal


 

இரண்டாம் உலகப் போரில், அமெரிக்காவின், தாக்குதலைத் தாக்கு பிடிக்க இயலாமல், ஜப்பான் சரணடைந்தது.

இதனை, அமெரிக்க மக்கள் உற்சாகமாகக் கொண்டாடினர்.

1945 – ஆகஸ்ட் 14-ஆம் தேதி.

போருக்குச் சென்று வெற்றிகரமாக, உற்சாகமாக திரும்பிக் கொண்டிருந்தார் ஒரு அமெரிக்க கடற்படை வீரர். நியூயார்க் நகரில் உள்ள டைம் ஸ்கொயரில், அவர் வெற்றிக் களிப்பில் சென்று கொண்டிருந்த சமயம், அவர் எதிரே, நர்ஸ் ஒருவர் சென்றார்.

என்ன நினைத்தாரோ அந்த கடற்படை வீரர், சட்டென்று, அந்தப் பெண்ணை இழுத்துச் சாய்த்து முத்தமிட்டார். இந்தக் காட்சியை அவ்வழியே சென்று கொண்டிருந்த ஆல்பிரட் என்பவர், தனது கேமராவில் படம் எடுத்தார்.

அந்தப் படத்தை “லைஃப்” பத்திரிகை வெளியிட்டது. அந்தப் படமும், அந்த எதிர்பாராத முத்தமும் உலகப் புகழ் பெற்றது.

44 வருடங்கள் கழிந்தது. நியூயார்க் ஸ்கொயரில் முத்தமிட்டுக் கொண்டவர்களைத் தேடிக் கண்டு பிடித்தது ஒரு பத்திரிகை.

அப்போது முத்தமிட்ட கடற்படை வீரர் ஜார்ஜ் மென்டாசுக்கு 65 வயது ஆகி இருந்தது. அந்த நர்ஸான, ட்ரூடி லீவிட் என்ற பெண்ணுக்கு 64 வயது, விதவையாக இருந்தார். அந்த 1945-ல் நடந்த சம்பவத்திற்குப் பிறகு, இருவரும் இந்த 44 ஆண்டுகளில் சந்தித்துக் கொள்ளவேயில்லை.

அந்தப் பத்திரிகை, இவர்களைத் தேடிக் கண்டு பிடித்து, அதே இடத்தில், இந்த இருவரையும், மீண்டும் முத்தமிட வைத்தது. சுற்றி உள்ளவர்கள் அனைவரும் கை தட்டி, ஆரவாரம் செய்தனர்.

இந்த செய்தியும், படமும் மீண்டும் உலகப் புகழ் பெற்றது.

அந்த முத்தத்தின் அனுபவத்தைப் பற்றி அந்தப் பெண்ணிடம் கேட்ட போது, “திடீரென்று, அவர் என்னை இழுத்து, முத்தமிட்ட போது, எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவரை உதறித் தள்ளவும் விரும்பவில்லை. வேறு வழியில்லாமல், அந்த முத்தத்தை நான் ரசிக்க வேண்டியதாகி விட்டது”, என்றார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a kiss between the 44 years


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->