குண்டான காதலியால் நேர்ந்த சோகம்.! காதலனோடு அதனை மேற்கொள்ளும் போது., செத்துப்போனது.!!  - Seithipunal
Seithipunal


 

அமெரிக்கா நாட்டில் வசித்து வருபவர் விண்டி தாமஸ் (44)., இவருடைய காதலனின் பெயர் கீனோ பட்லர். இவர்கள் இருவரும் சென்ற மார்ச் மாதம் ஒன்று சேர்ந்து மது அருந்தியுள்ளார்கள். அவ்வாறு மது அருந்தும் போது இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக விண்டி அவரது காதலரை அடிவயிற்றில் அடித்துவிட்டு கீழே தள்ளியுள்ளார். 

விண்டி தாமஸ் இயற்கையாகவே குண்டான பெண்மணி என்பதால்., காதலரை அடித்து கீழே தள்ளி அவரின் மீது ஏறி அமர்ந்துள்ளார். இவரின் எடையினை தாங்க இயலாத காதலன் மூச்சு விட கடுமையாக திணறியுள்ளார். அவரின் உயிர் அபாயத்தை உணராத விண்டி தாமஸ் அவரின் மீது அமர்ந்துள்ளார். இதன் காரணமாக பட்லர் சம்பவ இடத்திலேயே மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த காவல் துறையினர் விண்டி தாமஸை சிறையிலடைத்தனர். இந்த சிறை தண்டனைக்கு எதிராக வழக்கு தொடர்ந்த விண்டி தாமஸ் அவரின் வழக்கறிஞர்., எதிர்பாராத விதமாக இந்த சம்பவம் நடைபெற்றதாகவும்., தாமஸ் அவர்கள் வேணுமென்றே கொலை செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள்., முதலில் அவரை அடித்து கீழே தள்ளிய பின்னரே இந்த சம்பவம் அரங்கேறியுள்ளதன் காரணமாக இரு தரப்பு வாதங்களையும் கவனித்த நீதிபதிகள் வழக்கை வரும் 21 ம் தேதியன்று தள்ளிவைத்து உத்தரவிட்டனர். மேலும் விண்டிக்கு சுமார் 18 வருடங்கள் முதல் 36 வருடங்கள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம் என்று தெரிவிக்கின்றனர்.

மேலும் காதலனை கொலை செய்த விண்டி தாமஸின் எடை  (300 பவுண்ட்) அல்லது 136 கிலோ என்பது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A GIRL LOVER KILLED HER BOY LOVER BY DRINK ADIT.


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->