நீச்சல் உடையில் மலை உச்சி செல்பி.! திடீரென இடறிய காலால் நேர்ந்த சோகம்.!! கண்ணீரில் ஆதரவாளர்கள்.!! - Seithipunal
Seithipunal


தைவான் நாட்டை சார்ந்தவர் ஜிஜிவூ. இவர் மலைகளின் மீது கொண்ட காதலால் மலைகளின் மீது ஏறி அங்கிருந்து செல்பி எடுக்கும் பழக்கத்தை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில்., உயரமான மலைகளுக்கு செல்லும் இவர் நீச்சல் உடையில் புகைப்படங்களை எடுத்து தனது இணையப்பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். 

அந்த வகையில்., தனது இணைய பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை நீச்சல் உடையுடன் வெளியிட்டு பல பின்தொடர்பாளர்களை பெற்ற இவர்., தற்போது தைவானில் உள்ள உஷான் தேசிய பொன்னகவில் உள்ள உயரமான மலை சிகரத்தில் ஏற முடிவு செய்து., அதன் படி மலை சிகரத்தில் ஏறி நீச்சல் உடையில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். 

அந்த சமயத்தில் மலையோரத்தில் இருந்த இவரது கால்கள் இடறி மலை பள்ளத்தாக்கில் விழுந்து படுகாயத்துடன் உயிருக்கு துடித்தார். 

தனது கையில் இருந்து சாட்லைட் அலைபேசியின் மூலமாக தனது ஆதரவாளர்களுக்கு தகவலை தெரிவித்தார். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு ஹெலிகாப்டரில் மூலம் வரும் முன்னரே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a girl died slip from hills up side


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->