நியூசிலாந்து துப்பாக்கி சூடு சம்பவத்தில், திடுக்கிடும் தகவல்! அதிர்ச்சியில் இந்தியர்கள்!! - Seithipunal
Seithipunal


நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச்சில் நகரில், ஹாக்லே பூங்கா அருகே, மஸ்ஜித் அல் நூர் என்ற புகழ்பெற்ற மசூதி உள்ளது. இரண்டு நாட்கள்  அங்கு சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். 

அந்த நாட்டு நேரப்படி மதியம் 1.45 மணிக்கு மசூதி அருகே பயங்கர சத்தத்துடன் துப்பாக்கியால் சராமாரியாக சுடும் சத்தம் கேட்டுள்ளது. அங்கு நடந்த துப்பாக்கி சூட்டில் பலர் காயமடைந்தனர். சிலர் தரையில் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தனர்.

அங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 49 பேர் கொல்லப்பட்டனர், பலர் படுகாயமடைந்தனர். உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இந்த சம்பவம். மேலும், அங்கு நடந்த சம்பவம் ஒரு இனவெறி தாக்குதல் என்று நியூசிலாந்து போலீசார் தெரிவித்துள்ளனர். 

அங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில், துப்பாக்கிச்சூடு நடைபெற்றதில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 15 ஆண்டுகளாக நியூசிலாந்தில் வாழ்ந்து வரும் அகமது ஜஹாங்கீர், அல் நூர் மசூதிக்கு அருகே ஒரு உணவகத்தை நடத்தி வந்துள்ளார். அவருடைய குடும்பத்தினர் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக இந்தியாவில் வசிக்கும் அவரது சகோதரருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐதராபாத்தைச் சேர்ந்த பர்ஹாஜ் அஷான், கரீம்நகரைச் சேர்ந்த முகமது இம்ரான் கான், தெலுங்கானாவைச் சேர்ந்த ஒசைர் காதர் உட்பட 8 இந்தியர்கள் இச்சம்பவத்தில் உயிரிழந்ததாக, நியூசிலாந்து  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

8 indian dead in new zealand attack


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->