பிலிப்பைன்ஸ் ராணுவத்திற்கும், கிளர்ச்சிப் படைக்கும் இடையே துப்பாக்கிச் சூடு - 7 பேர் பலி - Seithipunal
Seithipunal


பிலிப்பைன்ஸ் ராணுவத்திற்கும், கிளர்ச்சி படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்து உள்ளனர்.

கடந்த 2014ஆம் ஆண்டு செய்யப்பட்ட அமைதி உடன்படிக்கையை எதிர்த்து மோரோ இஸ்லாமிய விடுதலை கிளர்ச்சி படையினருக்கும், பிலிப்பைன்ஸ் ராணுவத்திற்கும் இடையே அவ்வப்போது மோதல் நடந்து வருகிறது.

இந்நிலையில் பசிலான் மாகாணத்தின் புகான் நகரில் கிளர்ச்சி படையினருக்கும், ராணுவத்திற்கும் இடையே கடும் துப்பாக்கி சூடு நடைபெற்றது.

இந்த கடும் துப்பாக்கிச் சூடு சண்டையில், பிலிப்பைன்ஸ் ராணுவ வீரர்கள் 3 பேர், கிளர்ச்சி படையினர் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக பிலிப்பைன்ஸ் ராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த மூன்று நாட்களாக புகான் நகரை சுற்றி கிளர்ச்சி படையினர் தாக்குதல் நடத்தி வருவதாக பிலிப்பைன்ஸ் ராணுவ படை தளபதி பிரிகேடியர்-ஜெனரல் டொமிங்கோ கோப்வே தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

7 died in shooting between Philippines army and rebel forces


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->