குட்டியும், குடும்பமுமாக வீட்டில் தங்கியிருந்த பாம்பு கூட்டம்! கண்டதும் கொலைநடுங்கி போன உரிமையாளர்.! வைரலாகும் மரணபீதி வீடியோ.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள அல்பேனி பகுதியில் நபர் ஒருவர் தங்கியிருந்தார். அவர் டிவி  பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென கேபிள் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டில் தூசி அதிகம் தங்கியிருந்த நிலையில் அவர் மின்பெட்டியை ஆய்வு செய்வதற்காக வீட்டின் அடிப்பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு ஏராளமான பாம்புகள் இருப்பதை கண்டு அவர் பெரும் அதிர்ச்சி அடைந்தார். 

 அதனைத்தொடர்ந்து அவர் உடனடியாக இதுகுறித்து பாம்பு பிடிப்பவர்களுக்கு தகவலளிக்கப்பட்ட நிலையில் அங்கு விரைந்த அவர்கள் ஏரளமான பாம்புகள் இருப்பதாய் கண்டு திகைத்து போனார். மேலும் அங்கு விஷத்தன்மை கொண்ட கட்டியன் பாம்புகளும் பெருமளவில் காணப்பட்டது. 

இதனை தொடர்ந்து அவர்கள் வீட்டில் இருந்த அனைத்து பாம்புகளையும் சாமர்த்தியமாக பிடித்தனர். மேலும் அங்கு பாம்பு பிடிப்பவர்கள் 45 க்கு அதிகமான பாம்புகளை பிடித்துள்ளனர்.
 
இதுகுறித்து பாம்புகளைப் பிடித்தவர்கள் கூறுகையில், 'இது போன்ற பகுதிகளில் பாம்புகள் இருப்பது இயல்பானது. இவை தங்களை பராமரித்துக் கொள்ளவே இதை போன்ற இடங்களுக்கு வரும் . வீட்டில் அடியில் இருந்த 45  பாம்புகளையும் பாதுகாப்பாக மீட்டுள்ளோம்' என தெரிவித்தனர். இதுகுறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

45 rattlesnakes pulled from underneath man's home in Albany, Texas


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->