வீட்டின் மீது நொறுங்கி விழுந்த விமானம்! பரிதாபமாக பலியான உயிர்கள்.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள புல்லர்டென் விமான நிலையத்தில் இருந்து,சிறிய ரக விமானம் ஒன்று விமானி மட்டும் இருக்கும் நிலையில் புறப்பட்டு சென்றது.

இந்நிலையில் விமானம் யோப்ர லிண்டா நகருக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது, திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. மேலும் அந்த விமானம் அங்குள்ள ஒரு வீட்டின் மீது விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது.

இந்த விபத்தில் விமானத்தில் சென்ற விமானி மற்றும் வீட்டில் இருந்த 4 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இதில் படுகாயமடைந்த 2 பேர் மீட்கபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 people dead in flight accident


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->