கொடூர சம்பவம்.! பொதுமக்கள் 33 பேரை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள்.! - Seithipunal
Seithipunal


மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினோ பசோவில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகளுக்கும், அரசு படையினருக்கும் அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது. மேலும் பயங்கரவாத அமைப்புகள் கிராமங்களை சூரையாடுதல், கொள்ளையடித்தல் மற்றும் பொதுமக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் புர்கினா பாசோவின் மேற்குபகுதியான மெளஹோன் மாகாணத்தின் யுலு கிராமத்தில் மக்கள் விவசாயபணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொதுமக்கள் 33 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொண்டுள்ளனர். இதற்கான காரணம் குறித்து பயங்கரவாத அமைப்புகள் எந்தவித தகவலும் வெளியிடவில்லை.

இது தாக்குதல் தொடர்பாக பேசிய மாகாண ஆளுநர், இந்த தாக்குதல் கோழைத்தனமானது மற்றும் காட்டுமிராண்டித்தனமானது என்றும், தீவிரவாதிகளை ஒடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் தங்கள் விழிப்புணர்வை அதிகரிக்குமாறும், பாதுகாப்புப் படையினருடன் ஒத்துழைக்குமாறும் ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

33 people died as terrorists attack in Burkina faso


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->