23 அடி மலைப்பாம்பு வயிற்றில் 54 வயது பெண்.!  - Seithipunal
Seithipunal


54 வயதுடைய பெண் ஒருவர் சில தினங்களுக்கு முன் காணாமல் போய்விட்டார். இந்நிலையில் அவரின் உடல்  23 அடி மலைப்பாம்பு வயிற்றில் கண்டெடுக்கப்பட்டது. இந்த செயல் அந்த பகுதியில் பேரதிர்வை  ஏற்படுத்தியுள்ளது.
  
இந்தோனேஷியாவின் லாவேலா கிராமத்தை சேர்ந்தவர் வா திபா. இவருக்கு வயது 24 ஆகும்.  இவர் கடந்த வியாழக்கிழமை அன்று தன்னுடைய தோட்டத்திற்கு சென்றார். ஆனால் இரவு நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து அந்த ஊர் பொதுமக்கள் மற்றும் வா திபாவின் உறவினர்கள் அவரை தேடி வந்தனர்.  எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் 23 அடிக்கொண்ட மலைப்பாம்பு ஒன்று எங்கும் செல்ல முடியாமல் உருண்டு கொண்டிருந்ததது.

இதனையடுத்து, அந்த பாம்பு மேல் சந்தேகம் அடைந்த பொதுமக்கள், அந்த மலைப்பாம்பின் வயிற்றை கிழித்து பார்த்தார்கள்.  அப்போது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. அந்த பாம்பின் வயிற்றில் உள்ளே வா திபா சடலமாக இருந்து உள்ளார். பின் அந்த பாம்பில் உடலை கிழித்து அவருடைய சடலத்தை மீட்டு எடுத்துள்ளனர்.  

மலைப்பாம்பு இருந்த இடத்தில் இருந்து சுமார் 30 மீட்டர் தொலைவில் வா திபாவின் செருப்பு கிடந்து உள்ளது.  அவர்கள் வாழும் அந்த கிராமத்தில் பாம்புகள் சாதாரமாக நடமாடும் என்று அந்த ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

23 Feet Snake Stomach 54 Year Girl


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->