18 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த 68 வயது முதியவர்.. 3 வருட காதல்.. மிரள வைக்கும் சம்பவம்.! - Seithipunal
Seithipunal


78 வயது முதியவர் ஒருவர் 18 வயது இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் மிகவும் முக்கியமான நிகழ்வாகும். திருமண தின நிகழ்வுகளை நாம் ஒவ்வொரு நாளும் நம் மனதில் எப்போதும் நினைத்துப் பார்க்கிறோம்.

சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளும் 2கே கிட்ஸ்களுக்கும், திருமணம் எப்போது தான் நடக்கும் என்று காத்திருக்கும் 90ஸ் கிட்ஸ்களுக்கும் இடையே அடிக்கடி சமூக வலைத்தளங்களில் போர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் காகயான் மாகாணத்தில் வசித்து வருபவர் ரஷித் மங்காகோப் (வயது 78) விவசாயியான இவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஹலிமா என்ற 18 வயது பெண்ணை இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்துள்ளார். 

நாளடைவில் அவர்களுடைய நட்பு காதலாக மலர்ந்துள்ளது. தற்போது, ஹலிமாவுக்கு 18 வயது பூர்த்தியாகியுள்ளது. இந்த நிலையில், அவர்கள் இருவரும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் அரசியல் சட்டப்படி, 21 வயது பூர்த்தியாவதற்கு முன்பே பெற்றோர் அனுமதி வழங்கினால் திருமணம் செய்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

18 years old women married 78 years old man


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->