விரைவில் உலகை சுழற்றியடிக்க இருக்கும் இயற்கை பேரிடர்..? கரை ஒதுங்கிய 150 திமிங்கலங்களும் உயிரிழப்பு..!! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியா கடற்கரை ஒன்றில் கரை ஒதுங்கிய சுமார் 150 திமிங்கலங்களும் உயிரிழந்துள்ளன.

இவை அனைத்தும் குறுகிய தடுப்பு கொண்ட பைலட் வகை திமிங்கலங்கள் ஆகும்.

தற்போது மேலும் கரையொதுங்கி வரும் திமிங்கலங்களையும், கடற்கரையில் ஒதுங்கி உயிரோடு இருக்கும் திமிங்கலங்களையும் காப்பாற்றி மீண்டும் கடலுக்குள் அனுப்ப கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால், மோசமான வானிலை அங்கு நிலவுவதன் காரணமாக 140 திமிங்கலங்கள் உயிரிழந்தன.

கடற்கரையில் ஒதுங்கிய திமிங்கலங்களை மீட்க நூற்றுக்கும் மேற்பட்ட ஆர்வலர்கள், வனத்துறை அதிகாரிகள்என்று பலரும் போராடி வருகின்றனர்.

இதுமாதிரி இவ்வளவு திமிங்கலங்கள் ஒன்றாக கரை ஒதுங்கியதை இதுவரை பார்த்ததில்லை என சுற்றுலா வந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த வகை திமிங்கலங்கள் பொதுவாக 5 மீட்டர் அளவில் இருக்கும். இவை வெப்ப மண்டல மற்றும் துணை வெப்ப மண்டல கடல் பகுதிகளில் காணப்படும் என்று கூறுகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தோனேசியாவில் இதே போன்று திமிங்கலங்கள் கரை ஒதுங்கியதை அடுத்து உலகெங்கிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

150 melon-headed whales dead


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->