தங்க சுரங்கம் இடிந்து விழுந்து 14 தொழிலாளர்கள் பலி..! - Seithipunal
Seithipunal


சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 14 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

வடக்கு சூடானில் ஹல்ஃபா நகரில் இருந்து 70 கிமீ தொலைவில் உள்ள எகிப்து எல்லைக்கு அருகில் உள்ள ஜெபல் அல்-அஹ்மர் தங்கச் சுரங்கத்தின் வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்துள்ளது. இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் சுரங்க இடிப்பாடுகளில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இந்த கோர விபத்தில், 14 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 20 தொழிலாளர்கள் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. கடந்த 2021ஆம் ஆண்டில், மேற்கு கோர்டோபான் மாகாணத்தில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 31 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

14 worker killed in gold mine collapse in Sudan


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->