தமிழகத்தின் 13 மாவட்டத்திற்கு பகிரங்க எச்சரிக்கை.!!  இன்னும் இரண்டு நாள் யாரும் வெளிய வராதீங்க.!!! - Seithipunal
Seithipunal


கடந்த இரண்டு நாட்களாகவே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடுமையான வெயில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக மழை, பணி என்று தமிழகம் குளுமையாக இருந்த நிலையில், கடந்த சில தினங்களாக வெயில் வட்டி வதக்கி வருகிறது.

கோடை வெயில் ஆரம்பிக்க இன்னும் ஒரு மாதங்கள் உள்ள நிலையில், தற்போது 40 டிகிரி செல்சியஸ்க்கு மேலாக தமிழகத்தில் வெப்பநிலை பதிவாகியுள்ளது. நேற்று மாலை நிலவரப்படி திருத்தணியில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியது.

மேலும், வேலூர், மதுரை, திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் 39 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது.

இந்நிலையில், சென்னை வானிலை மையம் 13 மாவட்டங்களுக்கு அனல்காற்று வீசும் எச்சரிக்கையை விடுத்துள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு கடும் வெப்பம் நிலவும் என்றும், இதனால் அனல் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தர்மபுரி, மதுரை, சேலம், திருச்சி, வேலூர், கரூர், நாமக்கல், திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அனல் காற்று அதிகம் வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தின் ஒரு சில இடங்களில் வழக்கத்தை விட ஐந்து டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என்றும், வரும் 24 மணி நேரத்தை பொருத்தவரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும் என்றும், சென்னையில் அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் முதல் குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

கடுமையான அனல் காற்று வீசும் என்பதால் பகல் 12 மணி முதல் 3 மணி வரை வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், உடல்நலக்குறைவு உள்ளவர்கள் சாலையில் நடப்பதை தவிர்த்து கொள்வது நல்லது. அவசர வேலை இருக்கும் எனில் உடன் யாரையேனும் அழைத்து செல்லுங்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WEATHER REPORT FOR NEXT TWO DAYS


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->