இன்று முதல் மக்களை சுட்டெரிக்கும் வெயில் ஆரம்பம்! வானிலை அறிவிப்பால் பொதுமக்கள் வேதனை! - Seithipunal
Seithipunal


வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பில், மார்ச் 5-ஆம் தேதி, இன்று தமிழகத்தின் ஒருசில மாவட்டங்களில் பகல் நேரங்களில் அதிகப்படியான வெப்பம் நிலவும் என கூறப்பட்டுள்ளது. 6,7-ஆம் தேதிகளில் 11 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்றும் பகல் நேர வெப்பநிலை, இரண்டு முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் இந்த தாக்கம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் பருவமழை காலங்களில் மழை பெய்யாமல், வெயில் சுட்டெரித்தது. தற்போது கோடை காலம் ஆரம்பித்துவிட்டது எனவே மேலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில், சென்னையை பொருத்தவரை சில நேரங்களில் மேகமூட்டமாக காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் தற்பொழுதே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. மேலும் இந்த தகவல் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

summer started


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->