வடகிழக்கு பருவமழை தொடங்கும், தேதி குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக வடகிழக்கு பருவமழை, அக்டோபர் 8-ம் தேதி தொடங்கலாம் என எதிர்பார்த்தனர். ஆனால்,  அரபிக்கடலிலும் வங்கக்கடலிலும் புயல் சின்னம் உருவானதால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் இல்லை.

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை மற்றும் கன மழை பெய்து, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்துவந்தது.

இந்நிலையில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15-ம் தேதிக்கு பிறகு தொடங்க வாயப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வெப்ப சலனம் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். மேலும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

northeast monsoon starting day in 15


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->