அடுத்த ஐந்து நாட்களுக்கு சென்னையில் நடக்கப்போகும் சம்பவம்.! எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்.!! பதறும் சென்னை வாசிகள்.!!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இந்த வருடத்தில் வடகிழக்கு பருவமழையானது அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் தொடங்கி., வழக்கத்தை விட அதிகமான அளவிற்கு பருவமழை பெய்யும் என்று அனைவரும் எதிர்பார்த்து., அறிவிப்புகள் வெளியான நிலையில்., வங்கக்கடலில் உருவான கஜா புயலின் காரணமாக 12 மாவட்டங்கள் சிதைந்தது. 

இன்றோடு வடகிழக்கு பருவமழையானது நிறைவுபெற்ற நிலையில்., தமிழகத்தில் வழக்கத்தை விட 24 விழுக்காடு குறைவான மழையும்., சென்னையில் 50 விழுக்காடு அளவிற்கு குறைவான மழையும் பெய்துள்ளது. இந்நிலையில்., கடந்த சில நாட்களாகவே சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை மற்றும் இரவு நேரங்களில் அதிகப்படியான பனியானது பெய்து வருகிறது. 

காலை மற்றும் இரவு நேரங்களில் வீசும் குளிர்ந்த காற்றானது ஊட்டி மற்றும் கேரளா போன்ற மலை பகுதிகளில் இருக்கும் சூழ்நிலையினை சென்னை வாசிகள் அனுபவித்து வந்தனர். அதே போல., காலை சுமார் 8 மணி வரை சாலைகளில் கடுமையான அளவிற்கு பனி மூட்டமானது இருந்தது. இந்நிலையில்., தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையமானது தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையின் கடலோர மாவட்டங்களை தவிர உள்ள மாவட்டங்களில் மூடு பனியும்., நீலகிரி மலை பகுதிகளில் உறைபனியும் நிலவும் என்றும்., தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலையானது., மேற்கு நோக்கி நகர்ந்து., தமிழகத்திற்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படுத்தாது என்று தெரிவித்துள்ளது. மேலும்., சென்னையில் அதிகபட்சமாக 29 டிகிரி வெப்பநிலையும்., குறைந்த பட்சமாக 20 டிகிரி வெப்பமும் நிலவும் என்றும் தெரிவித்துளளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

next 5 days highly cold in Chennai announced by weather report


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->