சூடாக இருக்கும் தமிழக மக்களுக்கு, வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட குளிர்ச்சியான செய்தி! - Seithipunal
Seithipunal


வடகிழக்கு பருவமழையானது நிறைவுபெற்ற நிலையில், தமிழகத்தில் வழக்கத்தை விட 24 விழுக்காடு குறைவான மழையும், சென்னையில் 50 விழுக்காடு அளவிற்கு குறைவான மழையும் பெய்துள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை முதல் மலை வரை அதிக வெயில் வாட்டிவதைக்கிறது.

இரண்டு நாட்கள் முன்பு சென்னையின் புறநகர் பகுதிகளில், பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. சென்னையின் அண்ணாநகர், அடையாறு, மீனம்பாக்கம், வடபழனி, கீழ்பாக்கம், ஈக்காட்டுதாங்கல், பல்லாவரம், கொளத்தூர், அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின் படி தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், உள் தமிழகத்தில் இயல்பை விட 2 அல்லது 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

next 24 house rain for tamil nadu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->