தமிழக மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பல மாவட்டங்களில் கோடை மழை பெய்து வரும் நிலையில், இந்திய பெருங்கடல்-வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாவும், பின்னர் அது வலுப்பெற்று புயலாக மாறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 36 மணிநேரத்தில் இது  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும் .காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு  திசை நோக்கி நகர்ந்து அது புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த புயலுக்கு ஃ பனி புயல் என்று பெயர் வைத்துள்ளனர்.

இந்த ஃ பனி புயல் ஏப்ரல் 30ந் தேதி தமிழக பகுதியில் கரையை கடக்கும் என்றும் புயல் கரையை கடக்கும் போது 90-100 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். அப்போது கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india weather center report


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->