வெப்பநிலை உயர்வு விகிதத்தை பார்த்து அதிர்ந்து போன வானிலை அதிகாரிகள்!! வறட்சியின் பிடியில் தமிழகம்!!  - Seithipunal
Seithipunal


இனி வரும் காலங்களில் கடந்த வருடங்களை விட வெயிலின் தாக்கம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

வெயிலின் தாக்கம் குறித்து வானிலை மைய அதிகாரிகள், " தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 45 நாட்களாக மிகவும் வறண்ட வானிலை நிலவி வருகிறது. மேலும், சொல்லும்படி மழையும் ஒன்றும் இல்லை.

தற்சமயம் உறைபனி மற்றும் பனிமூட்டம் ஆகியவையும் தற்பொழுது குறைந்து விட்டது. வானில் மேகத்தின் நிலையம் சற்று குறைவாகவே காணப்படுகிறது. 

இதனால், தமிழகம் மற்றும் புதுவையில் வெப்பநிலை உயர ஆரம்பித்துள்ளது. இனி வரும் காலங்களில் அதிகப்படியான வெப்பநிலை கடந்த வருடங்களை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.

குமரிக்கடல் மற்றும் மாலத்தீவு முதல் அரபி கடலின் மகாராஷ்டிர கடற்கரை வரை, உள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் 4 நாட்களுக்கு ஒருசில இடங்களில் மழைபெய்ய கூடும்" என கூறியுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

high temperature in Tn and pondichery


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->