ஒரே நாளில் ஒரே இடத்தில் இந்திய வரலாற்றில் பதிவான பேய் மழை! திடீரெனெ வந்ததால் முடுங்கிப்போன மக்கள்! - Seithipunal
Seithipunal


ஒடிசா மாநிலத்தில் மேற்கு  பகுதியில் உள்ள பர்லா என்ற நகரில் ஞாயிறு காலை ஒரு பெருமழை பொழிந்து ஓய்ந்தது. ஞாயிறு காலை வரை பெய்த மழையில்  24 மணி நேரத்தில் வரலாற்றில் இல்லாத அளவாக 622 மிமீ மழை பதிவாகியுள்ளது. இது கடந்த 36 ஆண்டுகளில் இல்லாத அளவாகும். திடீரென பலத்த  மழை பொழிந்த காரணத்தால் பலபகுதிகள் நீரில் மூழ்கின.

இந்த கொடூர கனமழைக்கு இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும் இதுவரை கடலுக்குள் சென்ற 3 மீனவர்கள் திரும்பவில்லை என்ற தகவலும் கிடைத்துள்ளது. பர்லாவில் உள்ள ஹிராகுத் அணைத்திட்டத்தின் தலைமைக் கட்டுப்பாட்டு அறை கொடுத்த தகவலில்  ஒரே நாளில் ஒரே இடத்தில் அதிக மழையளவு பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. இது வரலாறு காணாத ஒன்று என்று அறிவித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் ஒடிசாவின் சராசரி மழைப் பதிவு 81.3மிமீ என்ற அளவில் பதிவாகியுள்ளது. பாலசோர் மாவட்டம் கீர்த்தானியாவிலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 17 பேர் கொண்ட குழுவில் 11 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 2 மீனவர்கள்  நேற்று நீந்திக் கரை சேர்ந்தனர். ஆனாலும் 3 மீனவர்கள் நிலை என்னவென்று இதுவரை தெரியாததால் மக்கள் சோகத்தில் உள்ளனர். கலிமாட்டி கிராமத்தில் வெள்ள நீரில் பெண் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டது மேலும் சோகத்தை உண்டாக்கியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

heavy rain in single place in orissa history


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->