சூடான தமிழக்தை கூலாக்க வரும் கோடை மழை சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!!! - Seithipunal
Seithipunal


வங்கக் கடலில் வரும் 26-ம் தேதி உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழகத்துக்கு மழை கொடுக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய துணை இயக்குநர் ஜெனரல் எஸ்.பாலசந்திரன் கூறியிருப்பது 

இந்திய பெருங்கடலில் நிலநடுக்கோட்டு பகுதி மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கைக்கு தென்கிழக்கே வரும் 26-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது இது வரும் 27 ஆம் தேதி  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இலங்கையை தாண்டி மன்னார் வளைகுடா வழியாக தென்னிந்திய பகுதியில் கடந்த செல்ல வாய்ப்புள்ளது. அந்த நேரத்தில் தென் தமிழகம் மற்றும் மத்திய தமிழக பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் கனமழை மழைக்கும் வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் ஒரு சில  இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது இன்று (ஏப்ரல் 22), தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய சூறைக்காற்றுடன் மணிக்கு 50 கிமீ வேகத்தில் வீசக்கூடும் மேலும்  சேலம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தேனி, திண்டுக்கல், திருப்பூர்,வேலூர் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி, நீலகிரி மாவட்டம் உதகையில் 10 செமீ, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், கோவை மாவட்டம் வால்பாறை, சேலம் மாவட்டம் ஓமலூர், மேட்டூர் ஆகிய இடங்களில் தலா 7 செமீ, நீலகிரி மாவட்டம் குன்னூர், கிருஷ்ணகிரி மாவட்டம் பருகூர் ஆகிய இடங்களில் தலா 6 செமீ மழை பதிவாகியுள்ளது

பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால் தமிழகத்தில் வெப்பநிலை சற்று  குறைந்துள்ளது நேற்று மாலை 5.30 மணிக்கு எடுக்கப்பட்ட வெப்பநிலை அளவின்படி அதிகபட்சமாக வேலூர் திருத்தணி ஆகிய இடங்களில் தலா 104 டிகிரி, தொண்டியில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய துணை இயக்குநர் எஸ்.பாலசந்திரன் கூறினார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

coming friday rainy season starts


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->