வெயிலால் வாடிய மக்களுக்கு வானிலை மையம் வெளியிட்ட குளுகுளு அறிவிப்பு.! ஊருக்கு போன இந்த மாவட்ட மக்கள் சந்தோசமாக இருங்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாவே கடுமையான வெயிலானது வாட்டி வதைத்து வருகிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடியாமல் மக்கள் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர். 

இந்த நிலையில்., தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. 

tamilnadu weatherman new video

மேலும், தென் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில்.,. தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வெயில் இயல்பை விட 3-4 டிகிரி செல்சியஸ் அதிகமானது.

சில மாவட்டங்களில் திடீரென மழையானது பெய்து மக்களின் மனதை குளிர வைத்தது. தமிழகத்தில்., கோயம்புத்தூர்., சேலம்., பொள்ளாச்சி., திருப்பூர் மற்றும் பாளையங்கோட்டையில் பரவலான மழை பெய்து., வெப்பத்தை ஓரளவு தணித்தது. 

இந்த சூழ்நிலையில்., டெல்டா மாவட்டங்களில் உள்ள திருவாரூர்., நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுவட்டார பகுதிகளில் வரும் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai weather report announce tamilnadu delta district have a rain


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->