வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய செய்தி! தமிழகத்தில் நடக்கவிருக்கும் வானிலை மாற்றங்கள்! - Seithipunal
Seithipunal


வடகிழக்கு பருவமழையானது நிறைவுபெற்ற நிலையில், தமிழகத்தில் வழக்கத்தை விட 24 விழுக்காடு குறைவான மழையும், சென்னையில் 50 விழுக்காடு அளவிற்கு குறைவான மழையும் பெய்துள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை மற்றும் இரவு நேரங்களில் அதிகப்படியான பனியானது பெய்து வருகிறது.

இந்நிலையில், மாலத்தீவு மற்றும் கன்னியாகுமரி கடல் இடையே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் வருகிற 20-ந் தேதி வரையிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலையின் நகர்வை பொறுத்து மழை வலுப்பெறுமா? என்பது தெரியவரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையை பெருத்துவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 days rain for tamilnadu and puducherry


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->