சொந்த கட்சியே சூனியம்?! மூக்குடைபட்ட ஸ்டாலின்.,திமுக இணையதளம் வெளியிட்ட அறிக்கை!!  - Seithipunal
Seithipunal


திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக-பாமக-பாஜக கூட்டணியை மிக மோசமாக தொடர்ந்து விமர்சித்து வருகிறார். மேலும், தான் ஒரு அரசியல்வாதியா என நினைக்கும் அளவிற்கு தரம்தாழ்ந்த வார்த்தைகளை உபயோகிப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை அளிக்கிறது.

மேலும், இதுகுறித்து இணையத்தளத்தில் பலர் ஸ்டாலினை அவரது செயல்களை ஒப்பிட்டு கலாய்த்து வருகின்றனர். அதாவது, முஸ்லிம் லீக் மதசார்பற்ற கட்சி. விசிக மற்றும் கொங்கு மண்டல தேசிய கட்சி , இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இதெல்லாம் சாதிகட்சிகள் இல்லையா?

இப்படியெல்லாம் சாதிய மதவாத கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டு மதச்சார்பற்ற கட்சி என விமர்சிப்பது எப்படி நியாயம்" என அவரது இணையதள பக்கத்திலேயே கேட்டு வருகின்றனர். 



 

மேலும், இன்று கூட்டணி கட்சிகளின் தொகுதி குறித்து திமுக ட்வீட்டர் பக்கத்தில் விசிக மற்றும் கொங்கு மண்டல தேசிய கட்சி , இந்திய ஜனநாயக கட்சி சாதி கட்சிகளுடனும், முஸ்லிம் லீக் போன்ற கட்சிகளின் பெயர்களை குறிப்பிட்டு அதற்கு கீழே மதச்சார்பற்ற கூட்டணி என குறிப்பிட்டு இருந்தது காண்போருக்கு சிரிப்பை வரவழைக்கும் விதமாக இருந்தது. 


 
அதிமுக பாமக பாஜக கூட்டணி மதவாத -சாதியவாத -சந்தர்ப்பவாத கூட்டணி என்று விமர்சித்ததற்கு பதிலடி கொடுக்கும் விதமாக எச்.ராஜா, " விசிக  மற்றும் கொங்கு மண்டல தேசிய கட்சி , இந்திய ஜனநாயக கட்சி சாதி கட்சிகளுடனும், முஸ்லிம் லீக் போன்ற கட்சிபோன்ற மதவாத கட்சிகளுடனும் கூட்டணி வைத்து கொண்டு இவர் அதிமுக கூட்டணியை சாதிய, மதவாத கூட்டணி என விமர்சிக்க தகுதி வாய்ந்தவரா? "என கேட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dmk official page insulted stalin


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->