ரூ. 3000 கேஷ்பேக்,  500 ரூபாய் தள்ளுபடி.! சியோமியின் அட்டகாசமான ஆஃபர்கள்.! உடனே முந்துங்கள்..!   - Seithipunal
Seithipunal


4 ஆண்டுகளுக்கு முன்பு எம்ஐ 3 ஸ்மார்ட்போன் அறிமுகத்தின் மூலம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தைக்குள்  ஜியோமி நிறுவனம் நுழைந்தது. 

ஜியோமி நிறுவனம் தற்போது நான்காம் ஆண்டு நிறைவை பல்வேறு புதிய ஆஃபர்களுடன் கொண்டாட இருக்கிறது. ஜியோமி நிறுவனத்தின் வருடாந்திர சிறப்பு விற்பனையை mi.com என்ற இணையதளத்தில் இன்று ஜூலை 10ல் தொடங்கி 12 வரை நடத்துகிறது. 

ஜியோமி நிறுவனம், எஸ்பிஐ, பேடிஎம் மற்றும் மொபிகுவிக் நிறுவனங்களுடன் இணைந்து ஆஃபர்களையும், கேஷ்பேக்குகளையும் தர இருப்பதாக அறிவித்துள்ளது. எஸ்பிஐ கிரெடிட் கார்ட் கொண்டு 7,500 ரூபாய்க்கு மேல் விலை கொண்ட பொருட்களை வாங்கும் போது 500 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். இதுபோலவே பேடிஎம் மூலம் ரூ. 8,999 வாங்குபவர்களுக்கு ரூ. 500 வரை கேஷ் பேக் கிடைக்கும். மேலும் பேடிஎம் மூலம் செய்யப்படும் விமான முன்பதிவிற்கு ரூ. 1000 கேஷ்பேக்கும், சினிமா டிக்கெட்களுக்கு ரூ. 200 கேஷ்பேக்கும் கிடைக்கும். மொபிகுவிக் மூலம் வாங்கும் பொருட்களுக்கு 25% சூப்பர் கேஷ் (அதிகபட்சம் ரூ. 3000 வரை) கிடைக்கும்

இதர ஆஃபர்கள்:

‘ப்ளின்க் அண்ட் மிஸ்’ என்ற டீல் மூலமாக சில குறிப்பிட்ட எண்ணிக்கையிலான காம்போ ஆஃபர்களை  ஜியோமி நிறுவனம் அறிவித்துள்ளது . 

இந்த ஆஃபர்கள்  ஜூலை 10 முதல் 12 வரை மாலை 6 மணிக்கு நடைபெறும். இந்த விற்பனையில், ரெட்மி நோட் 5 + எம்ஐ வி.ஆர் ப்ளே  : ரூ. 9,999 
ரெட்மி ஒய் 1 + எம்ஐ ப்ளூடூத் ஹேட்செட் : ரூ. 8,999 
எம்ஐ பாக்கெட் ஸ்பீக்கர் + எம்ஐ இயர்ஃபோன் பேஸிக் :ரூ. 1,499 
10000 எம்.ஏ.ஹச் எம்ஐ பவர் பேங்க் 2ஐ + எம்ஐ ரோலர்பால் பெண் :ரூ. 899 ஆகியன காம்போ ஆஃபர்களில் கிடைக்கும். 

இந்த அனைத்து காம்போக்களும் 200 எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைக்கு உள்ளதாம் .  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Xiaomi 4th MI anniversary New Offers


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->