வதந்திகளை தடுக்க புதிய கட்டுப்பாடுகளை விதித்த வாட்ஸ் அப் ..!! இனிமேல் பதிவுகளை பகிர்வதில் சிக்கல்..!!  - Seithipunal
Seithipunal


வதந்திகள் பரவாமல் தடுக்க, ஒரே சமயத்தில் 5 பேருக்கு மேல் எந்த ஒரு செய்திகளையும் பகிர முடியாதவாறு புதிய கட்டுபாடுகளை விதிக்க கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) நிறுவனம் முடிவு செய்துள்ளது. 

இதுகுறித்து கட்செவி அஞ்சல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

உலக அளவில் மற்ற நாடுகளைக் காட்டிலும், இந்தியாவில்தான் அதிகமானவர்கள் செய்திகள், புகைப்படங்கள், விடியோக்கள் என அனைவற்றையும் கட்செவி அஞ்சலில், அதிக அளவில் பகிர்ந்து வருகிறார்கள். 

இதனை தடுக்க தற்போது புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளோம். அதன்படி எந்த ஒரு செய்திகளையும் 5 நபர்களுக்கு மேல் பகிர முடியாது. இந்த கட்டுப்பாடுகள் விரைவில் அனைவருக்கும் வரும். தற்போது     சோதனை முறையில் இருக்கிறது. விரைவில் நடைமுறைக்கு வரும்.

உங்கள் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் செய்திகளை பகிர்ந்துகொள்ளவே கட்செவி அஞ்சல் உருவாக்கப்பட்டது. அதற்கான சேவையை தொடர்ந்து வழங்குவோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Whatsapp New Control For Forward Message


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->