உஷார்! வாட்சப்பில் பரவும் கோல்டு வைரஸ்! லிங்கை தொட்டாலே, உங்கள் போன் அவ்வளவு தான்!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் குறுஞ்செய்தி பரிமாற்றத்தில் முதலிடத்தில் வகிப்பது வாட்சப் செயலி தான். உடனுக்குடன் செய்தி சென்றடைய வாட்சப் செயலியை தான் அதிகமானோர் பயன்படுத்திகின்றனர். ஸ்மார்ட் போன் வைத்துள்ளவர்களில் 98 சதவீதம் பேர் வாட்சப் செயலியை பயன்படுத்துகிறார்கள் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இளைஞர்கள் அதிகமானோர் வாட்சப் பயன்படுத்துவதிலேயே அதிகளவு நேரத்தை செலவழிக்கின்றனர். 

                                              

இந்தியாவை பொறுத்தவரையில், தகவல் பரிமாற்றத்திற்கு 98 சதவிகிதம் வாட்சப் செயலியையும், 2 சதவிகிதம் முகநூல் மெசேஞ்சர் செயலியையும் பயன்படுத்துகின்றனர். உலக அளவில் அதிக நேரம் வாட்சப் பயன்படுவது இந்தியர்கள் தான் என ஒரு சர்வே கூறுகிறது. 

இந்த நிலையில் வாட்ஸ்அப் கோல்டு என்னும் வைரஸ் வாட்சப் செயலியில் ஒரு லிங்க் மூலமாக பரவி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அதாவது வாட்ஸ்அப் கோல்டு  என்ற ஒரு லிங்க், வாட்ஸ்அப்  செயலியின் மூலம் பரவி வருகிறது.  இந்த லிங்குடன், மிக பெரிய பல பிரபலங்கள் இதை பயன்படுத்துவதாகவும், தாங்களும் இதனை அப்டேட் செய்தால், நாம் தனிச்சிறப்பு வசதிகள் பலவற்றை வாட்ஸ்-அப்பில் பெறமுடியும் என்ற செய்தியும் அதில் குறிப்பிடப்பட்டு இருக்கும். 

இந்த லிங்கை தெரிந்தோ, தெரியாமலோ கிளிக் செய்தால், உங்களை மொபைல் வைரஸால் பாதிக்கப்படும். அதன் மூலம், உங்கள் வாட்ஸ் அப் உரையாடல்களை அவர்கள் கண்காணிக்க முடியும். உங்களிடமிருந்து திருடப்பட்ட அந்த தகவலை வைத்து அவர்கள் உங்களையே மிரட்டலாம்.  

மேலும் இந்த செயலி, உங்கள் மொபைலில் ஊடுருவி, உங்களது டிஜிட்டல் வங்கி செயலிகளின் கடவு சொல்லையும் திருடும். இதனால் பணமோசடிக்கு நீங்கள் ஆளாக்கப்படுவீர்கள்.  இந்த வைரஸ் ஆனது இதற்கு முன்னரே 2016ல் வேறு பெயரில் பரவியது. தற்போது வாட்ஸ்அப் கோல்டு என்ற புதிய பெயரில் பகிரப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Whatsapp Gold Virus Tech news Update


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->