அய்யயோ போச்சு.. இனி இவிங்க தொல்லை தாங்க முடியாதே..! வாட்ஸ் அப்புல வச்சுட்டாங்க ஆப்பு..!! புதிய அப்டேட்..!!! - Seithipunal
Seithipunal


வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்டில் குரூப் வீடியோ கால் அம்சம் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

IMO அப்ளிகேஷன் போன்ற சாத் ஆப்களில் குரூப் வீடியோ கால் அம்சம் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில், உலகில் வாழும் மக்களில் அதிகம் பயன்படுத்தும் செயலியான வாட்ஸ் ஆப்ல் தற்போது வர இருக்கும் புதிய அப்டேட்டில் குரூப் வீடியோ கால் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 

தற்போதுவரை, ஒரு நபரிடம் மட்டுமே வாட்ஸ் ஆப்பில் வீடியோ காலில் பேச முடியும். ஆனால், இப்போது வரப்போக்குக்கும் அப்டேட்டில் நாம் இருக்கும் குரூப்பில் உள்ள 5 பேரிடம் ஒரே நேரத்தில் வீடியோ கால் பேச முடியும். மேலும், இந்த வீடியோ காலின் தரம் மிகவும் தெளிவாக துல்லியமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

''வீடியோ கான்பிரன்ஸ் கால்'' என்று இதற்க்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த வசதி வாட்சப் பீட்டாவில் வந்துள்ளது. ஆப்பிள் போன்களுக்கு அடுத்த அப்டேட்டில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related image

வாட்ஸ் ஆப் இப்போது உலகின் முன்னணி சாட்டிங் ஆப்பாக இருந்த போதிலும், வீடியோ கால் செய்வதற்கு வேறு ஆப்களையே நாம் பயன்படுத்திவருகின்றோம். அதை முறியடிக்கவே வாட்ஸ் ஆப் இந்த புதிய அப்டேட்டில் களமிறங்கியுள்ளது.

இனி உங்க நண்பர்களின் அன்பு தொல்லை தங்க முடியாது, எப்படி சமாளிக்க போறிங்களா. சும்மாவே வாய்ஸ் மெசேஜ் பண்ணி கடுப்பேத்துவானுங்க. இதுல குரூப் கால் வேற.. என்ன பண்ண போறானுங்களோ..?!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WHATS APP NEW UPDATE IN GROUP CALLWHATS APP NEW UPDATE IN GROUP CALL


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->