இனி உங்கள் அனுமதியின்றி வாட்ஸ்அப் குரூப்பில் இணைக்கமுடியாது.! வாட்ஸ்அப் நிறுவனம் அதிரடி.!! - Seithipunal
Seithipunal


வாட்ஸ்அப் நிறுவனம் புதிய அப்டேட்டை கொண்டுவந்துள்ளது. அதன்படி முன் பின் தெரியாதவர்கள் யார்வேண்டுமானாலும் வாட்ஸ்அப் குரூப்களில் இணைப்பதை தடுக்கும் வகையில் வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது ஒரு அப்டேட்டை கொண்டுவந்துள்ளது.

அதன்படி, யார் ஒருவர் வாட்ஸ்அப் குரூப்களில் இணைக்கலாம் என்பதை முன் கூட்டியே தேர்வுசெய்துகொள்ள முடியும். இதன்படி அக்கவுண்ட்  பிரைவசி  குரூப் என்ற பகுதிக்குச் செல்ல வேண்டும். அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் மூன்று (Nobody, My Contacts or Everyone) என்ற வசதியில் ஏதேனும் ஒன்றைத் தேர்வுசெய்துகொள்ளலாம்.

Nobody என்கிற வசதியை தேர்வுசெய்தால், குழுவில் இணைக்கப்படும் நபருக்கு இன்வைட் மெசேஜ் வரும். அந்த குறுச்செய்தியை பார்த்து, விருப்பமிருந்தால் இணைந்துகொள்ளலாம் இல்லையெனில் இணையாமல் இருந்துவிடலாம்.

அந்த இன்வைட் குறுச்செய்தி, மூன்று நாள்களில் காலாவதி ஆகிவிடும். My contacts என்கிற வசதியை தேர்வுசெய்தால் மொபைலில் எண்ணைப் பதிவுசெய்து வைத்திருக்கும் நபர்கள் மட்டும் அனுமதி இன்றி குரூப்களில் இணைக்க இயலும். Everyone என்கிற வசதியை தேர்வுசெய்தால், யார் வேண்டுமானாலும் குரூப்களில் இணைக்க முடியும். ஆண்ட்ராய்டு இயங்குதளத்துக்கான வாட்ஸ்அப் செயலிக்கு இப்போது இந்த வசதி கொண்டுவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

whats app new update


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->