34 ஆயிரம் கோடி: மிகப்பெரிய தவறு செய்த கூகுள்.! கதிகலங்க வைத்த 28 நாடுகள்.!! அடுத்தகட்ட நடவடிக்கையில் கூகுள்.!!! - Seithipunal
Seithipunal


தனது பயனர்களை அதிகரிக்க வைக்கும் வகையில், ஆண்ட்ராய்டை முறைகேடாக பயன்டுத்தி விதிகளை மீறி செயல்பட்டதாக ''ஐரோப்பிய யூனியன்'' கூட்டமைப்பு  கூகுள் நிறுவனத்திற்கு அபராதம் விதித்துள்ளது.

ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகள் தங்கள் சமூக மக்களின், பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு ''ஐரோப்பிய யூனியன்'' என்ற கூட்டமைப்பை உருவாக்கின. 1993 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் பிரான்சு, ஜெர்மனி, பெல்ஜியம், பிரிட்டன், இத்தாலி, டென்மார்க், போர்ச்சுக்கல் உள்ளிட்ட 28 நாடுகள் இடம்பெற்று உள்ளன.

இந்நிலையில், வலைத்தளங்களில் பிரபல தேடுபொறியான (சர்ச் என்ஜின்) ''கூகுள்'' நிறுவனம், உலகில் அதிக பயனர்களைக் கொண்ட ஒரு 'சர்ச் என்ஜினாக' இருந்துவருகிறது. 

ஆனால், ஆசை யாரை விட்டது என்பது போல், மேலும் அதிக பயனர்களை கொண்டுவர கூகுள் விதிகளை மீறி ஆண்ட்ராய்டை உபயோகித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது சம்மந்தமாக கடந்த மூன்று வருடங்களாக விசாரணை நடந்து வருகிறது.

இந்த விசாரணையை அடிப்படையாக கொண்டு, ஐரோப்பிய யூனியனின் விதிகளை மீறி கூகுள் நிறுவனம் செயல்பட்டதாக கூறி தீர்ப்பு அளித்தது. அதில், ''கூகுள் நிறுவனத்திற்கு இந்திய ரூபாய் மதிப்பில் 34,218 கோடி ரூபாய் (5 மில்லியன் டாலர் ) அபராதம் விதித்துள்ளது. மேலும், கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டை தவறாகப் பயன்படுத்துவதை 90 நாட்களுக்குள் நிறுத்திக்கொள்ள வேண்டும். 

தன்னுடைய போட்டியாளர்களை நல்ல முறையில் நடத்த வேண்டும். இணையத்தில் பல்வேறு வகையில் சிறப்பாக செயல்பட்டு வரும் சிறிய நிறுவனங்களை பாதிக்காத வகையில் செயல்படுவதற்கு அனுமதிக்க வேண்டும்.'' என தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஆனால் இந்த வழக்கில் அபராதம் செலுத்த முடியாது என கூகுள் நிறுவனம் மேல்முறையீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

union European WARN TO GOOGLE


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->