ட்விட்டரில் புதிய வசதி.! அனைவரையும் அசத்தும் வகையில் புதிய தொழில்நுட்பம்.!! - Seithipunal
Seithipunal


ட்விட்டர் பயனர்களின் டைம்லைனில் நிகழ்நேர செய்திகளை காட்சிப்படுத்த  புதிய சேவை அறிமுகமாக வருகிறது!

அரசியல் முதல் எந்த ஒரு நிகழ்வையும் தீர்மானிக்கும் சக்தியாக சமூக ஊடகங்கள் விளங்குகின்றது. இதிலும் முக்கியமாக முகநூல், கட்செவி அஞ்சல்( வாட்சஸ்ஆப்), கீச்சு( ட்வீட்டர்) ஆகியன அதிகப்படியான பயனாளர்களை வைத்துள்ளது. இளைஞர்கள்  முதல் வயதானவர்கள் வரை இந்த செயலிகளில் தான் அதிக நேரம் செலவிடுகின்றனர் என்று ஆய்வு தெரிவிக்கின்றது.

நாம் தற்போது பயன்படுத்தி வரும் முகநூல் கணக்கை பயன்படுத்தும் போது, பயனர்களின் விருப்பங்களை அறிந்து அவர்களுக்கு விருப்பமான செய்திகளை அவர்களது கணக்கில் காட்சிப்படுத்தி வருகின்றது. இந்த அம்சமானது முகநூல் பயனாளர்களை கவர்ந்துள்ளது.

இதுபோன்று பிரபல சமூக வலைதளமான ட்விட்டர், தங்களது பயனர்களின் டைம்லைனில் செய்திகளை வெளியிட திட்டமிட்டுள்ளது.இதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகின. முகநூலை காட்டிலும் சிறப்பு அம்சங்களோடு ட்வீட்டரில் இந்த வசதி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும், முகநூல் மற்றும் கட்செவி அஞ்சல் போன்று ட்வீட்டர் தகவல் பரிமாற்றத்தில் என்கிரிப்படட் முறையினை அறிமுகப்படுத்த உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tweeter release New technology


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->