நேற்று சத்தமில்லாமல் போர் தொடுத்த விடுதலை புலிகள்..! கதிகலங்கி போன உலக நாடுகள்..!! திக்குமுக்காடிய இலங்கை..!!! 'ஆப்ரேஷன் முள்ளிவாய்க்கால்'...!!!! - Seithipunal
Seithipunal


 'ஆப்ரேஷன் முள்ளிவாய்க்கால்'..! இலங்கை இணையத்தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்..!!

ஆப்ரேஷன் முள்ளிவாய்க்கால் என்ற பெயரில் இரண்டாவது முறையாக 300 க்கும் மேற்பட்ட இலங்கையின் இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால், உலகமெங்கும் இந்த விடயம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மே 18 ஈழதமிழின அழிப்பு நாளான நேற்று, ''ஆப்ரேஷன் முள்ளிவாய்க்கால்'' என்ற பெயரில் இலங்கை தூதரகங்களில் உள்ள இணையத்தளங்கள், இலங்கை அரசின் அதிகாரபூர்வ இணையங்கள் மற்றும் இலங்கை அரசுக்கு ஆதரவான செய்தி ஊடகங்களின் இணையங்கள் என அந்நாட்டின், 300 க்கும் மேற்பட்ட இணையத்தளங்களை சைபர் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

இந்த தாக்குதலில் அந்த இணையதளங்கள் முழுவது, ''முள்ளிவாய்க்கால் நிகழ்த்தப்பட்ட தமிழ் இன்படுகொலையின் கோரா சம்பவங்களை அடக்கிய புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார். மேலும் அதில், நாங்கள் இந்த இனஅழிப்பை மறக்க மாட்டோம் என்ற செய்தியையும் பதிவேற்றியுள்ளனர்.

மேலும், யாழில் உள்ள இலங்கையின் இந்திய துணை தூதரகத்தில் உள்ள இணைய தளத்திலும் இந்த ''ஆப்ரேஷன் முள்ளிவாய்க்கால்'' தாக்குதல் நடந்துள்ளது. இலங்கையின் முக்கிய இணைய இணையதளங்களில் இந்த தாக்குதல் நடந்திருப்பதால், பல ரகசிய தகவல்கள் வெளியாகிருக்கலாம் என அச்சத்தில் இலங்கை அரசு திக்குமுக்காடி நிற்கிறது.

இந்த வருடம் மே 18 ல் நடத்தப்பட்ட இதே தாக்குதலை கடந்த வருடம் இதே நாள் அன்று அதாவது, ஈழத்தில் இனபடுகொலை நடத்தப்பட்ட நாளான நேற்று 200க்கும் மேற்பட்ட இணையத்தளங்களை முடக்கியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். நேற்று நடந்த தாக்குதல் இரண்டாவது முறையாகும்.

உலக வல்லாதிக்க நாடான, அமெரிக்காவிற்கு பெரும் தலைவலியாக உள்ள சைபர் தாக்குதல், தற்போது, தமிழீழ விடுதலைப்புலிகள் என்கின்ற பெயரில், தமிழர்களை கொன்றுகுவித்த இலங்கை அரசையும் கதிகலங்க வைத்திருப்பது உலக நாடுகளையயும் கதிகலங்க வைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sri lankan all official website hacked


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->