புதிய ஆஃபருடன் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி நோட் 9 ..!  - Seithipunal
Seithipunal


சாம்சங்  கேலக்ஸி நோட் 9 என்ற ஸ்மார்ட்போன் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகியது. அதன் விலை ரூ.67,650 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. 

இந்நிலையில் சாம்சங் நிறுவனம் தற்போது  "1டிபி ஆஃபரை"  அறிவித்துள்ளது. இந்த சலுகையில் 512ஜிபி மைக்ரோSD கார்டு சிறப்பு தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. 

நோட் 9 512 ஜிபியினை கொண்ட இதோடு தற்போது இவோ பிளஸ் 512ஜிபி மெமரி கார்டு சலுகை விலையில் ரூ. 4,999க்கு  வழங்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

இந்த சலுகையில் கேலக்ஸி நோட் 9 512ஜிபி மாடலை சாம்சங் இவோ பிளஸ் மெமரி கார்டு தொகுப்புடன் ரூ. 89,999 விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் அதன் உண்மையான விலை ரூ.107,900 ஆகும். இந்த விலையில் இருந்து தற்போது ரூ.17,900 தள்ளுபடி செய்யப்பட்டு சலுகை விலையில் விற்கப்பட உள்ளது. 
 
சாம்சங் கேலக்ஸி நோட்9-ன் முக்கியம்சங்கள்:

* டூயல் சிம் வசதி கொண்டது. 

* ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவில் இயங்குகிறது.

* பிங்கர் பிரிண்ட் சென்சாரானது பின்பக்கம் இருக்கும் 

* 4000mAh பேட்டரியினை கொண்டுள்ளது.

* 6.4இன்ச் ஹெச்டி மற்றும் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்பிளேயினைக் கொண்டது. 

* ஆக்டோ கோர் Exynos 9810So கொண்டு இயங்குகிறது.

* 6ஜிபி / 128ஜிபி மற்றும் 8ஜிபி / 512 ஜிபி என இரண்டு வேரியண்ட் கொண்டது.  

*  512ஜிபி வரையிலான மைக்ரோSD கார்டுகளை பயன்படுத்தலாம்.  

* 12 மெகா பிக்சல் டூயல் சென்சார், 12 மெகா பிக்சல் சென்சார் மற்றும் செல்ஃபிக்கு 8 மெகா பிக்சல் சென்சாரும் கொடுக்கப்பட்டுள்ளது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New Offer Samsung Galaxy Phone


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->