நாசாவே அஞ்சி நடுங்கி கொண்டிருக்க, இந்தியா கையில் எடுத்த வேலை..! இது மட்டும் நடந்து விட்டால், சர்வதேச சபையில் இந்தியாவை விஞ்ச யாரும்.. - Seithipunal
Seithipunal


பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குனராக செயல்பட்டு வருபவர் தான் தமிழ்நாட்டை சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரை..

இவர் சமீபத்தில் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள  பள்ளியின் பவள விழாவில் கலந்து கொண்டு பேசினார், அவர் பேசியது பின்வருமாறு,

மாணவர்கள் குறைந்த நிறையுள்ள செயற்கை கோளை தயாரித்து கொடுத்தால், அவை  இலவசமாக விண்ணில் ஏவப்படும்

இளம் விஞ்ஞானிகள் புதிய உத்திகளை கண்டறிவதுடன் நிறுத்தி கொள்ள கூடாது, புதிய சிந்தனைகளை உருவாக்க வேண்டும்.

மாணவர்கள் செயற்கை கோள் தயாரிப்பில் ஈடுபட்டால் வியாபார ரீதியாக வெளிநாடுகளுக்கும் வழங்க முடியும்.

ஆண்டிற்கு 12 முதல் 18 செயற்கை கோள்களை அனுப்ப அரசு நடவடிக்கை எடுக்கும்.இதனால் மாணவர்களுக்கு இந்த துறையில் ஆர்வம் பெருகும்..

இந்த துறையை பற்றி தெரிந்துகொள்ள பெரிய வாய்ப்பாக அமையும். 

இந்த ஆய்வு பணிகளுக்காக செயற்கைக்கோள் திட்டம், ஆதித்யா எல் 1 என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த செயற்கைக்கோளானது பி.எஸ்.எல்.வி. எக்ஸ்.எல். ராக்கெட்டின் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்வான் விண்வெளி ஆய்வு தளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது.

மேலும், வருகிற 2020-ம் ஆண்டில் திட்டமிட்டபடி சூரியனை ஆய்வு செய்வதற்கான செயற்கை கோள் விண்ணில் ஏவப்படும் என   அவர் கூறினார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mayil sami annadurai motivating students to build a satellite


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->