அதள பாதாளத்தை நோக்கி செல்லும் ஜியோ..! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கியமான 10 நகரங்களில் டிராயின்  சுதந்திரமான 4ஜி டிரைவ் பரிசோதனையில்,ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகிய இரண்டு டெலிகாம் நிறுவனங்களும் , ரிலையன்சின் ஜியோவை புரட்டி போட்டுள்ளது,அதுமட்டுமில்லாமல் போட்டியாளரான ஐடியாவை விடவும் பின்தள்ளியுள்ளது. 

Related image

டிராயின் பரிசோதனை அறிக்கையின்படி,ஏர்டெலின் சராசரி பதிவிறக்க வேகம் 9.64 எம்பிபிஎஸ் ஆக பதிவாகியுள்ளது. இது ரிலையன்சின் ஜியோ பதிவிறக்க வேகத்தை விட 40% வேகமானது

Image result for airtel.

ஐடியாவின் சராசரி பதிவிறக்க வேகம் சுமார் 7.41 எம்பிபிஎஸ் என்றும் பதிவாகியுள்ளது. 

Image result for idea

இந்த டிரைவ் டெஸ்டில் வோடபோனின் 4ஜி நெட்வொர்க்கும் இருந்தது.ஆனால் அது ஆறு நகரங்களில் மட்டுமே இருந்தது,இருப்பினும் பரிசோதனை நிகழ்ந்த பத்து நகரங்களில் ஆறு நகரங்களில் மட்டுமே வோடபோன் அதன் எல்டிஇ சேவைகளை வழங்குகிறது. அதனால் பரிசோதனையானது அந்த ஆறு நகரங்களில் மட்டும் பதிவு செய்யப்பட்டு சராசரி கணக்கிடபட்டது.அதன்படி வோடாபோனின் சராசரி பதிவிறக்க வேகம் - 10.5 எம்பிபிஎஸ், இது ஏர்டெல் நிறுவனத்தின் வேகத்தை விட அதிகம்.

Image result for vodafone

இந்த சோதனைகள் ஹரியானாவின் பிவானி, உத்திர பிரதசத்தின் கிழக்கில் அமைந்துள்ள கான்பூர், ராஜஸ்தானில்  உள்ள கோட்டா, பிஹாரில் உள்ள பாட்னா மற்றும் ராஞ்சி, மத்தியபிரதேசத்தில் உள்ள ராய்பூர்,தமிழகத்தின் கோயம்புத்தூர்,கேரளாவின் கோழிக்கோடு, புதுச்சேரி மற்றும் விஜயவாடா ஆகிய இடங்களில் நடத்தப்பட்டது.

Image result for jio necative

மைஸ்பீட் பயன்பாட்டின்படி ஜியோவின் 20.3எம்பிபிஎஸ் என்கிற சராசரி பதிவிறக்க வேகமானது படிப்படியாக 6.5எம்பிபிஎஸ் ஆக குறைந்துள்ளது. ஆனால் அதே மைஸ்பீட் பயன்பாட்டின்படி,ஏர்டெல் மற்றும் ஐடியா  நிறுவனங்களின் பதிவிறக்க வேகம் முறையே 8.9 எம்பிபிஎஸ் மற்றும் 8.2 எம்பிபிஎஸ் என்று பதிவாகியுள்ளது.
இந்த அறிக்கையின் மூலம், முகேஷ் அம்பானியின் ஜியோ சத்தமின்றி கீழ்நோக்கி செல்வது தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jio speed goes down


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->