என்ன ஏது என்று விசாரியுங்கள்.. உளவுத்துறையை முடுக்கி விடும் சீனா.. உலக நாடுகள் பீதியில் உறைய இன்று இந்தியாவில் நடந்தது..? - Seithipunal
Seithipunal


இந்திய பாதுகாப்புத்துறையில் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கக்கூடிய வகையில் அக்னி ஏவுகணை தயாரிக்கப்பட்டு அது வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

இதுவரை 4 வகையிலான அக்னி ஏவுகணைகள் தயார் நிலையில் உள்ளன. இதையடுத்து தற்போது அக்னி-5 சோதனையும் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.

கடந்த 1960-களில் இருந்து அக்னி வகை ஏவுகணைகளின் தயாரிப்பு நடந்து வருகிறது.

2012- அக்னி-1

2013- அக்னி-2

2015- அக்னி-3,

2016- அக்னி-4

ஏவுகணைகள் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டன. இந்நிலையில், தற்போது வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ள அக்னி-5 வகை ஏவுகணை 5,000 கிலோ மீட்டர் தூரம் சென்று இலக்கை தாக்கும் தன்மை கொண்டது.

அக்னி-5 ஏவுகணை, இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பால் உருவாக்கப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையாகும்.

ஈரடுக்கு அக்னி-3 ஏவுகனையோடு கூடுதலாக ஒரு அடுக்கைச் சேர்த்து உருவாக்கப்பட்டது. நடமாடும் ஏவுதளத்தில் இருந்து ஏவப்படக்கூடியதால், இதை இடமாற்றுவது மிகவும் எளிதானது.

அக்னி-5 ஏவுகணை, 17 மீட்டர் உயரமும், 49 டன் எடையும் கொண்டது. ஓடிசாவிற்கு அருகில் உள்ள வீலர் தீவில் இருந்து, 19 ஏப்ரல் 2012 அன்று ஏவுகணை முதலில் சோதிக்கப்பட்டது.

நடமாடும் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டு, சூலை 2013 இல் சோதிக்கப்பட்டது. மீண்டும் வீலர் தீவிலிருந்து இரண்டாம் முறையாக, 15 செப்டம்பர் 2013 அன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

தற்போது மீண்டும் ஒடிஸாவில் உள்ள அப்துல் கலாம் ஏவுதளத்தில் இருந்து சோதிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் சக்திவாய்ந்த ஏவுகணைகளை வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளுடன் இந்தியாவும் இணைந்துள்ளது.

இன்னும் அக்னி 6 தயாரிப்பில் உள்ளது. அதுவும் சோதனை செய்யப்பட்டு விட்டால், உலக அரங்கில் ஏவுகணை தொழில்நுட்பத்தில் தன்னிறைவு அடைந்த நாடாக இந்தியா உருவெடுத்து விடும்.

ஏவுகணை நாயகனின் கனவை மெய்பிக்கும் முயற்சியின் இறுதி கட்டத்தில் உள்ளது இந்தியா.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india-successfully-test-fires-agni-v-missile


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->