கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!! - Seithipunal
Seithipunal


தொழில்நுட்ப புரட்சி யுகத்தில் முடிசூடா மன்னனாக விளங்கும் ஐ.பி.எம் நிறுவனமானது ஆனது உலகின் மிகச்சிறிய கணினியை வெளியிட்டுள்ளது.

வெறும் ஒரு மி.மீ அளவீடு கொண்ட உலகின் மிகச்சிறிய கணினியினை ஐ.பி.எம் நிறுவனமானது திங்க் 2018 (IBM Think 2018) மாநாட்டில் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து ஐ.பி.எம் வெளியிட்டுள்ள ஆராய்ச்சி குறிப்பில்,

"உலகின் மிகச் சிறிய கணினியை கொண்டுவரும் முயற்சியினை ஆரம்பிக்கையில் அது நானோ வடிவத்தில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.

இறுதியாக உப்பு துண்டை விட சிறியதாக இருக்க வேண்டும் என்று உறுதி ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இது வெறும் 10 சென்டிற்கும் குறைவான செலவில், ஆயிரக்கணக்கான சிப்புகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கணினியால் கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும், தொடர்பு கொள்ளவும் மற்றும் தரவு செயல்படவும் முடியும்.

தற்போதைய கணினிகளை போல அல்லாமல் மிகவும் பாதுகாப்பானதாகவும், ஆனால் 2000 வாக்கில் வந்த கணினிகளை போல வசதிகளை கொண்டிருக்கும்" அதில்  என்று கூறப்படுகிறது.

இந்த கணினி வடிவமைப்பானது ஐ.பி.எம் நிறுவன ஆய்வு 5-ன் ஒரு பகுதியாகும்.

இதன் மூலமாக அடுத்த 5 ஆண்டுகளுக்குள் தற்போது புழக்கத்தில் உள்ளதை விட சிறிய சாதனங்களை வடிவமைப்பதே இலக்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

We've seen companies boasting that they've created incredibly small computers in the past, but most of these are still massive compared to IBM's latest


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->