#TechUpdate: இது தான் மொபைல் வாங்க சரியான நேரம்! 48 MP கேமராவுடன் அதிரடியாக களமிறங்கும் ஹோனர் மொபைல்! பொங்கலை முன்னிட்டு புக்கிங் ஓபன் !! - Seithipunal
Seithipunal


 ஹூவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானரின் அடுத்த படைப்பு ஹானர் வியூ 20 ( honor view 20) ஸ்மார்ட்போன். இந்த போன் கடந்த மாதம் சீனாவில் வெளியாகியது. இதையடுத்து, இந்திய சந்தையில் ஹானர் வியூ 20 வருகிற 29 ஆம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. இந்நிலையில், பொங்கலை பண்டிகையை முன்னிட்டு இதற்கான ப்ரீ புக்கிங் நாளை மறுநாள் ( JAN 15 ) முதல் ஹானர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் மூலம் பதிவு செய்யலாம். 


 
இதன் பிரத்யோக விற்பனையை அமேசான் நிறுவனம் பெற்றுள்ளது.  இது விலை குறித்த விவரம் இன்னும் வெளியாகவில்லை. தோராயமாக 35 ஆயிரத்திற்கு விற்கப்படும் என கூறப்படுகிறது.   

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் ஹானர் வியூ 20 அறிமுகப்படுத்தப்பட்டது,  சர்வதேச சந்தையில் வரும் 22ஆம் தேதி இந்த போன் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ஹானர் வியூ 20  சிறப்பு அம்சங்கள்:

விலை : இந்திய விலை விவரம் பற்றி இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை. சீனாவில் விற்கப்பட்ட விலையை வைத்து இந்தியாவில், ஹானர் v20 6ஜிபி ரேம் + 128ஜிபி நினைவகம் கொண்ட போனின் விலையானது CNY 2,999 (தோராயமாக ரூ.30,400) ஆகும். 8ஜிபி ரேம் + 128ஜிபி கொண்ட போனின் விலையானது CNY 3,499 (தோராயமாக ரூ.35,500) க்கு விலை நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. இது தோரயமானதே, அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். 

கலர் வேரியண்ட் :  ப்ளூ, ரெட், மற்றும் மிட்நைட் பிளாக் உள்ளிட்ட 3 நிறங்களில் இந்த போன் கிடைக்கிறது. இதில் 8ஜிபி ரேம் + 256ஜிபி நினைவகம் கொண்ட போன் தோராயமாக ரூ.40,600 ஆகும். இந்த போன் ஏற்கனவே சீனாவில் விற்பனையாகிறது.  இந்த போன் இந்தியாவில் வரும் ஜன.29முதல் அறிமுகமாகும் என்கிறார்கள்.

* ஹோல் பன்ச் செல்பி கேமரா சென்சார் போனின் இடதுபுறம் பொருத்தப்பட்டுள்ளது

* கிளாஸி கிரேடியண்ட் பினிஷிங் கொண்டுள்ளது.  

* டூயல் கேமரா செட்டப் கொண்டது.

* கைரேகை சென்சார் உள்ளது.

* ஹானர் வியூ 20 சிறப்பம்சங்கள்:

* டூயல் சிம் 

* ஆண்ட்ராய்டு 9.0 பை கொண்டு இயங்குகிறது. 

* 6.4-இன்ச் புல் எச்டி + (1080x2310 பிக்செல்ஸ்) டிஎப்டி டிஸ்பிளே 19.5:9 அக்செப்ட் ரேசியோ, 16.7 மில்லியன் கலர்கள் கொண்டுள்ளது.

* ஆக்டோ கோர் ஹைசிலிகான் கிரின் 980 பிராசஸருடன் 8ஜிபி மற்றும் 6ஜிபி வேரியண்ட்களில் கிடைக்கிறது. 

* இதன் நினைவகம் 128ஜிபி மற்றும் 256ஜிபி வகைகளில் கிடைக்கிறது. 

* இதில் மைக்ரோ Sd கார்டு சப்போர்ட் கிடையாது.

ஹானர் வியூ 20 கேமரா : 
 
        * பின்பக்கமாக 48 மெகா பிக்ஸெல்ஸ் சோனி IMX586 சென்சாருடன் f/1.8 அப்பர்ச்சர், 960fps ஸ்லோ மோஷன் வீடியோ ரெகார்டிங் சப்போர்ட், எச்டிஆர், எல்இடி பிளாஷ் கொண்டுள்ளது. 

        * முன்பக்கம் 25 மெகா பிக்ஸெல்ஸ் சென்சார் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Honor View 20 India Pre-Bookings Open With Free Honor Sport Earphones on Offer


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->