பொது இடங்களில் வைஃபை பயன்படுத்துகிறீர்களா..? மிகப்பெரிய ஆபத்து வரும்..! மத்திய அரசு எச்சரிக்கை..!! - Seithipunal
Seithipunal


பொது இடங்களில் வைஃபை பயன்படுத்தினால் எளிதில் ஹேக் செய்ய வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.

நாடு முழுவதும், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் போன்றவற்றில் இலவச வைஃபை வசதி வழங்கப்பட்டு வருகிறது. அதனை ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பொது இடங்களில் கிடைக்கும் இலவச வைஃபை வசதியை பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசின் தொழில்நுட்ப நிறுவனமான இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் எச்சரித்துள்ளது.

பொது இடங்களில் கிடைக்கும் இலவச வைஃபை மூலம் எளிதில் சைபர் தாக்குதல் நடத்த வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. 

அதன் மூலம் ஹேக்கர்கள் உள்ளே புகுந்து பொதுமக்களின் வங்கி கணக்குகள், கிரெடிட் கார்டு விவரங்கள், பாஸ்வேர்ட் உள்ளிட்டவைகளை திருடக்கூடிய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.

இதனால், பொது இடங்களில் இலவசமாக கிடைக்கும் வைஃபை வசதிகளை தவிர்த்துவிட்டு, வி.பி.என். சேவையை பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Union Government warns dont use free wifi in public place


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->