அடடே! இனி கூகுள் மேப்பில் எல்லா கிரகங்களையும் பார்க்கலாமாம் : வருகிறது புதிய அப்டேட்..!! - Seithipunal
Seithipunal


கூகுள் மேப்பில் எல்லா கிரகங்களையும் பார்க்கும் வகையில் புதிய அப்டேட் வரவுள்ளது. 

அதற்கான செயல்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், மக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் வரும் என்றும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கூகுளில் நாம் எதை தேடினாலும் அதற்கு விடை கிடைக்கும். அதே போன்று மேப்பில் எந்த பகுதியையும் பார்க்க முடியும். இந்த மேப் மூலம் யாருடைய உதவியும் இல்லாமல் எந்த பகுதிக்கும் செல்லலாம். எந்த முகவரியையும் தேடி கண்டுபிடிக்கலாம்.

இப்படி அனைத்து வகையிலும் பயனுள்ளதாக இருக்கும் கூகுள் மேப்பில் தற்போது புதிய அப்டேட்டை அந்நிறுவனம் செய்ய முடிவு செய்துள்ளது.

அதில், சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்கள், அதன் நிலவுகள், புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்கள் என அனைத்தையும் தெளிவாக ஜூம் செய்து பார்க்க முடியும்.

நிலவில் நீர் இருப்பது முதல் டைட்டனில் உள்ள மீத்தேன் மேகம் வரை துள்ளியமாக காண முடியும். இவை அணைத்தும், காஷினி வின்கலம் மூலம் எடுக்கப்பட்ட படங்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வசதியை பெற தனியாக எந்த மென்பொருளையும் டவுன்லோடு செய்ய வேண்டியதில்லை. தற்போதுள்ள கூகுள் மேப்பை அப்டேட் செய்தாலே போதும். செல்போன் மற்றும் கம்ப்யூட்டர்களில் காணலாம்.

இதற்கான அப்டேட்டை ஒருசில வாரங்களில் கூகுள் நிறுவனம் வெளியிடவுள்ளது. அதன்பிறகு உலகமே இல்லை, ஒட்டுமொத்த அண்டமே கை பிடியில் தான்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Google Maps now explore Mars and the Moon


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->