அங்கே பறக்க பறக்க இங்க மானம் பறக்குதே... இந்தியாவை இப்படியுமா வாய பிளக்க வைப்பாங்க..? - Seithipunal
Seithipunal


பறக்கும் மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்த துபாய் போலீஸ் துறை முடிவு செய்துள்ளது.

தற்போது உலக நாடுகளை அதீத தொழில்நுட்ப பயன்பாடுகளினால் வியப்பில் ஆழ்த்தும் நாடுகளில் ஒன்றாக துபாய் பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே சூப்பர் கார், தானியங்கி ரோபோட் மற்றும் ஆண்ட்ராய்டு காவலர் போன்ற தொழில்நுட்பங்களை துபாய் போலிசார் பயன்படுத்தி வரும் நிலையில், பறக்கும் மோட்டார் சைக்கிள்களை துபாய் போலீஸ் பயன்படுத்த இருக்கிறது. இதன் மூலம் வானத்தில் இருந்தபடியே கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள முடியும்.

ஸ்கார்பியான் என அழைக்கப்படும் புதிய பறக்கும் மோட்டார்சைக்கிள் ரஷ்யாவின் ஹோவர்சர்ப் (Hoversurf) எனும் தொழில்நுட்ப நிறுவனம் வடிவமைத்துள்ளது.

நான்கு இறக்கைகள் வாகனத்தின் இருக்கையை சுற்றி நான்கு முனைகளில் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த மோட்டார் சைக்கிள் தொடர்ச்சியாக 25 நிமிடங்களுக்கு வானத்தில் பறக்கும், மணிக்கு 64 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது

.ஒருவர் மட்டும் பயணம் செய்யக்கக்கூடிய ஸ்கார்பியான் தானியங்கி முறையில் இயங்கும் என்றும் அதிகபட்சம் 272 கிலோ எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டுள்ளது.

பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வரும் துபாய் போலிஸ் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய பறக்கும் மோட்டார்சைக்கிள்களையும் பயன்படுத்த துபாய் போலீஸ் துறை திட்டமிட்டுள்ளது.

இதற்கென துபாய் காவல் துறை மற்றும் ஹோவர்சர்ஃப் நிறுவனங்களிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக ஹோவர்சர்ஃப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான அலெக்சான்டர் அடமனோவ் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

துபாய் போலீஸ் பயன்படுத்தும் பறக்கும் மோட்டார்சைக்கிளினை வீடியோவில் காணலாம்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The Russian made new Hoversurf Scorpion craft will be used for responding to emergency situations. And the highlight, it can even run on its own without a driver, totally a scene from any Hollywood sci-fi film.


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->