தாமரை இலையின் மீது தண்ணீர் ஏன் ஒட்டவில்லை தெரியுமா?....ஆச்சர்ய பட வைக்கும் தகவல்! - Seithipunal
Seithipunal


தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாததற்கு காரணம் என்னவென்றால் அதன் மேற்புறம் இருக்கும் ஸ்பிடெர்மிஸ் பகுதி ஆகும்.

இந்தப் பகுதியில் செல்லுலோஸ் அதிகம் உள்ளது. இச்செல்லுலோஸானது க்யூட்டினைசேஷன் எனும் ரசாயன மாற்றத்தால் க்யூட்டிகிள் என்னும் தண்ணீர் புக முடியாத ஒரு மெல்லிய சவ்வை உருவாக்குகிறது.

இத்தகைய க்யூட்டிக்கிள் சவ்வில் மெழுகு போன்ற வேதிப்பொருள் ஒன்று உள்ளது. இதில் அதிக அளவில் கார்பன் அணுக்களை கொண்ட ஆல்கஹால் மூலக்கூறுகள் அமைந்துள்ளன. இந்த மூலக்கூறுகள் தண்ணீரில் கரையாத தன்மை கொண்டவை.

மேலும் இது வேறு எந்த பொருட்களினாலும் வேதிமாற்றம் அடையாத ஹைட்ரோ கார்பனாகவும் அமைந்துள்ளது. 

இதன் காரணமாகத் தான் தாமரை இலையின் மேலே அமைந்துள்ள இந்த மெழுகு போன்ற சவ்வானது இலையின் மீது தண்ணீர் ஒட்டாதபடி தடுத்து விடுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Do you know why the water on the lotus leaf does not stick?


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->